districts

img

சிபிஎம் மூத்த தோழர் சின்னையன் நினைவேந்தல் நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி, செப்.16 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் சின்னையனின் நினைவேந்தல் நிகழ்வு சிவ ராமன் நினைவிடத்தில் திங்களன்று நடை பெற்றது. நிகழ்விற்கு தெற்கு ஒன்றியச் செய லாளர் டிவி.காரல்மார்க்ஸ் தலைமை வகித் தார். மாவட்டக் குழு உறுப்பினர் டி.சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார். சின்னையனின் வாழ்க்கை வரலாறு களை நினைவுகூர்ந்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உரை யாற்றினார். அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட் டது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.சாமிநாதன், கே.வி. இராஜேந்தி ரன், கே.பி.ஜோதிபாசு, ஆறு.பிரகாஷ், நகர் மன்றத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகரச் செயலாளர் கே.கோபு மற்றும் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.