districts

img

ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.5-  ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் செவ்வாய் அன்று ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி ஆகியோர் பேசினர்.  இதேபோன்று புள்ளம்பாடி, லால்குடி ஒன்றிய குழுக்கள் சார்பில் லால்குடி ரவுண்டானா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு லால்குடி ஒன்றியச் செயலாளர் மார்ட்டின் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மூத்த தோழர் லூர்துசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், ரஜினிகாந்த், புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் அருமை தாஸ், மாவட்டக்குழு உறுப்பினர் பாலு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். துறையூர் ஒன்றியக்குழு சார்பில், துறையூர் பேருந்துநிலையம் அருகே, ஒன்றியச் செயலாளர் சங்கிலிதுரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரமோகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆனந்தன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை 

தரங்கம்பாடி ஒன்றியம் சார்பில் திருக்கடையூர் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் குணசுந்தரி, அம்மையப்பன், டி.ஆர்.ராணி, ஐயப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு, ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகரச் செயலாளர் துரைக்கண்ணு ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  செம்பனார்கோவில் ஒன்றியம் சார்பில், ஆக்கூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் தோட்டம் ஜோதி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணகி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.  குத்தாலம் கிழக்கு ஒன்றியம் சார்பில், பெரம்பூர் கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் சி.விஜயகாந்த் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் கண்டன உரையாற்றினார். குத்தாலம் கடைவீதியில் மேற்கு ஒன்றியச் செயலாளர் ராமகுரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமுல்காஸ்ட்ரோ உரையாற்றினார்.  சீர்காழி ஒன்றியம் சார்பில், ஒன்றியச் செயலாளர் ஞானபிரகாசம் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. மார்க்ஸ் கண்டன உரையாற்றினார். கொள்ளிடம் கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் கேசவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. மாரியப்பன் உரையாற்றினார். மாவட்டம் முழுவதும் 7 மையங்களிலும் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து்கொண்டனர்.

அரியலூர்

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்டச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், துரைசாமி, அருணன், வெங்கடசலம், கந்தசாமி, அம்பிகா, கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மன்னார்குடி

பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து, மன்னார்குடி ஒன்றிய நகரக் குழுக்களின்  சார்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றியச் செயலாளர் கே ஜெயபால் தலைமையில் நடைபெற்றது.  நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன் கண்டன உரையாற்றினார். கட்சியின் மூத்த தோழர் டி.ஜெகதீசன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு பிரகாஷ் சிறப்புரையாற்றினார். ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  கோட்டூர் கோட்டூர் கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் எஸ்.தங்கராசு, தமிழாசிரியர் செல்லையா, மாதர் சங்க தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி உரையாற்னார்.