திருவாரூர், ஜன.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டு நிதி வசூல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரு கிறது. அதனொரு பகுதியாக திரு வாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கூத்தா நல்லூர் மற்றும் மன்னார்குடி ஆகிய நகரங்களில் 25 குழு அமைக்கப் பட்டு திங்கள்கிழமை துவங்கியது. திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிதி வசூல் குழுவிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, எம்.சேகர், டி.வீரபாண்டியன், பா.கோமதி, திருவாரூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.சுந்தரய்யா, நகரச் செய லாளர்கள் திருவாரூர் எம்.டி.கேசவ ராஜ், பேரளம் ஜி.செல்வம் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி நகராட்சி யில் நடைபெற்ற நிதி வசூல் குழு விற்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.ஜோதிபாசு தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.என்.முருகானந்தன், கே.பி. ஜோதிபாசு, திருத்துறைப் பூண்டி ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல் மார்க்ஸ், நகரச் செயலாளர் கே.கோபு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், திருத்துறைப் பூண்டி நகராட்சி துணைத் தலை வர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூத்தாநல்லூரில் நடைபெற்ற நிதி வசூல் குழுவிற்கு மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட குழு செயற்குழு உறுப்பினர் கே.தமிழ் மணி, மன்னார்குடி ஒன்றியச் செய லாளர் கே.ஜெயபால் உள்ளிட் டோர் பங்கேற்றனர். மன்னார்குடியில் நடைபெற்ற நிதி வசூலில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ராதா தலைமை வகித்தார். கட்சி யின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி மற்றும் மன்னார்குடி நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன், வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் டி.சண்முகம் உள்ளிட்டோர் நிதி வசூலில் ஈடு பட்டனர். நிதி வசூலில் ஈடுபட்ட தோழர் களிடம் பொதுமக்கள் புன்னகை யுடன் நிதி அளித்தனர். திருவாரூர் நிதி வசூலின் போது, 10 வயது சிறுவன் ஆர்வத்துடன் வந்து நிதி வழங்கினார்.