districts

img

தோழர் நாவலன் நினைவு ரத்த தான முகாம்

திருவாரூர், ஜன.20 - தியாகி ஜெ.நாவலன் 14 ஆம் ஆண்டு  நினைவு தினத்தையொட்டி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ரத்த  தானம் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நன்னிலம் ஒன்றியம், பேரளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியத் தலைவர் ஜெ.கக்கன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.எம்.பாலா முன்னிலை வகித்தார். அமைப்பின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ரத்த தான முகாமை துவக்கி  வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ், ஒன்றிய பொரு ளாளர் ரஞ்சித் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 33 வாலிபர்கள் ரத்த தானம் வழங்கினர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும்  செவிலியர்கள் ரத்த தானம் வழங்கிய இளை ஞர்களை பாராட்டினர்.