districts

img

மாவீரன் பகத்சிங் நினைவு நாளில் உறுதியேற்பு

விருதுநகர், மார்ச் 23- விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் மாவீரன் பகத்சிங் நினைவு  தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்திய விடுதலைக்காக போராடியதால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால்  தூக்கி லிடப்பட்ட மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு தினத்தில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. விருதுநகர் அருகே யுள்ள சூலக்கரையில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு மீ.சிவ ராமன் தலைமையேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றி யச் செயலாளர் கே. இராஜேந்திரன் துவக்கி வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வள்ளி யம்மாள், முத்துமாரி, கிளைச் செயலாளர் ஆறு முகம், மூத்த தோழர்கள் ஜெ. ஜெ.சீனிவாசன், பசுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.