districts

img

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் கைது  

திருச்சியில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிஇ மேல்நிலைப் பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஇ மேல்நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியின் தாளாளராக ஜேம்ஸ் என்பவர் உள்ளார். அந்த பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே  மாணவிகளுக்கான  விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் தங்கி பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவரிடம் பள்ளியின் தாளாளர் ஜேம்ஸ்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில், விசாரணைக்குப்பின் பள்ளி தாளாளர் ஜேம்ஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.