பெரம்பலூரில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் வினோத் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே பூலாம்பாடியை சேர்ந்த வினோத் என்பவர் அதிமுக நகரச் செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு இவர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி தன்னுடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். அப்படி இல்லையென்றால் உயிரோடு எரித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அரும்பாவூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் அதிமுக நகர செயலாளர் வினோத்தை இன்று போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.