tamilnadu

img

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் துறைமுக ஊழியர் கைது  

காரைக்காலில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துறைமுக ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடியைச் சேர்ந்த பால்ஜெபகுமார்(வயது 36) என்பவர் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.  அதேசமயம் இவருக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் எற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பெண்ணிற்கு 13 வயதில் மகள் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று அந்த பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் பால்ஜெபகுமார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.  அப்போது வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு பால்ஜெபகுமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.    

இதை அறிந்த சிறுமி கூச்சலிட்டதால் பால்ஜெபகுமார் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து 13 வயது இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி தாயிடம் கூறியபின், சிறுமியின் தாயார் காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்துள்ளார்.  

சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் பால்ஜெபகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பால்ஜெபகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.