திருவாரூர், ஜன.20 - திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் ஜன.24 முதல் பிப்.2 வரை 3 ஆவது புத்தக கண்காட்சி நடை பெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அறியும் வகையில், புத்தக கண்காட்சி நிகழ்ச்சிகள் குறித்த ஒட்டு வில்லைகளை ஒட்டிய பேருந்தினை திருவாரூர் நகராட்சி அலுவல கத்திலிருந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் கொடி யசைத்து துவக்கி வைத்தனர். திருவாரூர் நகராட்சி-ஒன்றியம், மன்னார்குடி நகராட்சி-ஒன்றியம், திருத்து றைப்பூண்டி-ஒன்றியம், கூத்தாநல்லூர் நகராட்சி, முத்துப்பேட்டை பேரூராட்சி-ஒன்றி யம், நன்னிலம் பேரூராட்சி-ஒன்றியம், பேரளம் பேரூராட்சி, குடவாசல் பேரூராட்சி- ஒன்றியம், வலங்கைமான் பேரூராட்சி-ஒன்றி யம், நீடாமங்கலம் பேரூராட்சி-ஒன்றியம், கொரடாச்சேரி பேரூராட்சி-ஒன்றியம், கோட்டூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று புத்தக கண்காட்சி குறித்து பொது மக்கள் அறியும் வகையில் இப்பேருந்து இயக்கப்படுகிறது.