districts

திருச்சி முக்கிய செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்கு  வங்கி மேலாளர் வாழ்த்து

கும்பகோணம், செப்.6 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பாரத ஸ்டேட் வங்கி மே லாளராக சத்யா பணி யாற்றி வருகிறார். இவர் சமூக ஆர்வலராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செப்டம் பர் 5 ஆசிரியர் தினத்தை யொட்டி நாச்சியார்கோவில் கிளை அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரி வித்தார். அப்போது நாச்சி யார்கோவில் அருகில் உள்ள ஆரியச்சேரி கிராமத் தில் சிறப்பாக இயங்கி வரும் ஆரியச்சேரி அரசுப்  பள்ளிக்கு நேரில் சென்று  அங்குள்ள ஆசிரியர் களை வாழ்த்தினார். ஆசி ரியர்கள், வங்கி மேலாள ருக்கு நன்றி தெரிவித்த  னர்.

பெண்ணிடம்  நகைகள் திருட்டு

தஞ்சாவூர், செப்.6 - தஞ்சாவூரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நகைகள் திருடிய மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி பெரிய கடை  வீதி பகுதி கள்ளர் தெரு வைச் சேர்ந்தவர் லோக நாதன் மனைவி சாந்தி (59).  இவர் செப்.2 அன்று தஞ்சா வூருக்கு வந்த போது, பழைய பேருந்து நிலையத் திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் பயணம் செய்தார். அப் போது, இவரது கைப்பை யில் இருந்த 7 பவுன் எடை யுடைய ஒரு தங்கச் சங்கிலி, இரு மோதிரங்கள் திருட்டு போனது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் புதன் கிழமை வழக்குப் பதிந்து  விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் ஆய்வு கூட்டம்

அரியலூர், ஆக.6 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவின் பேரில், ஊராட்சி தணிக்கை உதவி இயக்குநர் பழனிச்சாமி தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.  கிராம ஊராட்சிகளில் வரி இனங்கள் மற்றும் குடிநீர் கட்டண பாக்கிகளை உடனடியாக வசூல் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள பணிகளை இந்த  மாத இறுதிக்குள் முடிக்க  வேண்டும். ஊராட்சி பகுதி களில் உள்ள கடைகளில் போதை வஸ்துகளான ஹான்ஸ், குட்கா, புகை யிலை உள்ளிட்ட பொருட் கள், இனிப்பு பண்டங்க ளில் போதை கலப்பு போன் றவை பற்றி கண்டறிந்தால் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.  இடைநின்ற பள்ளி மா ணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் கல்வி கற்க செய்ய வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் ஊராட்சி தணிக்கை உதவி  இயக்குநர் அறிவுறுத்தி னார்.

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு: கருத்து கேட்புக் கூட்டம் 

தஞ்சாவூர், செப்.6 -  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறப்பு  சுருக்க முறைத் திருத்தம் 2025 முன்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியான, தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சி பிரதிநிதிகளைக் கொண்டு கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட  ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் தெரிவிக்கை யில், “1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிகள், இரண்டு கி.மீ க்கு மேல் தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகள், வாக்காளர் பட்டியலில் பாகங்கள் பிரிப்பது போன்ற இனங்கள், வாக்குச்சாவடி கட்டடம் பழுத டைந்ததன் காரணமாக வேறு ஒரு கட்டடத்திற்கோ அல்லது  வேறு ஒரு இடத்திற்கோ மாற்றுதல் தொடர்பான விவரங்கள்,  பாகங்களை ஒன்றிணைக்கும் இனங்கள் இருப்பின் அதன்  விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகள்  தரம் உயர்த்தப்பட்டிருப்பின் அதன் விவரங்கள் ஆகியவற்றை  9.9.2024 அன்று மதியம் 12 மணிக்குள், அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சி பிரதிநிதிகளிடம் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலு வலர், வருவாய் கோட்ட அலுவலரிடம் அளிக்கலாம்”  என்றார்.

கத்தியை காட்டி மிரட்டி 15 பவுன் நகைகள் பறிப்பு: 2 பேர் கைது

தஞ்சாவூர், செப்.6- தஞ்சாவூரிலுள்ள பட்டு கூட்டுறவு சங்கத்தில் புகுந்து  பெண் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 15 பவுன்  நகைகளை பறித்துச் சென்ற 2 பேரை காவல் துறையினர்  வியாழக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் வடக்கு ராஜ வீதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் மனைவி பிரகதீஸ்வரி (62). இவர் தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி சிவராயர் தோட்டத்திலுள்ள பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு  பெற்று, தற்போது தற்காலிக பணியாளராகப் பணியாற்றி  வருகிறார்.  இவர் புதன்கிழமை பிற்பகல் பணியில் இருந்தபோது,  பட்டுச்சேலை வாங்குபவர்கள் போல 2 பேர் புகுந்து,  சேலைகளைக் காட்டுமாறு கூறினர். பட்டுச் சேலைகளை  எடுத்துக் காட்டிக் கொண்டிருந்த பிரகதீஸ்வரியை 2 பேரும்  கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கி, அவர் அணிந்திருந்த 15  பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் பிரக தீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா.சோமசுந்தரம் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பி ரமணியன், உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நிகழ்விடத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான  காட்சிகளைத் தனிப்படையினர் ஆய்வு செய்து, 2 பேரை  பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் தஞ்சா வூர் அண்ணா நகர் அருகேயுள்ள சாந்தி நகரைச் சேர்ந்த உ.செந்தில்குமார் (46), நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரி யர் காலனி அருகேயுள்ள திருநகரைச் சேர்ந்த பி. பாலசந்தர்  (35) என்பதும், இருவரும் இணைந்து பிரகதீஸ்வரியிடம் நகைகளைக் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.  இதையடுத்து, இருவரிடமிருந்து 15 பவுன் நகை களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து, இருவரை யும் வியாழக்கிழமை கைது செய்தனர்.

காதி கிராப்ட்க்கு சொந்தமான  2.41 ஏக்கர் நிலம் தமிழ்நாடு சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம், செப்.6- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட கமுதி சுற்று வட்டார பொதுமக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று  தமிழ்நாடு முதல மைச்சர்  உத்தரவின்படி  காதி கிராப்ட்டுக்கு சொந்தமான  2.41 ஏக்கர் பரப்பளவு நிலத்தை  தமிழ்நாடு சட்டத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.  அந்த இடத்தில் தற்பொழுது ஒருங்கிணைந்த நீதிமன்ற  கட்டிடம் கட்டுவதற்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பி னரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வியாழக்கிழமையன்று பார்வையிட்டார்.  இந்த நிகழ்வில் கமுதி ஒன்றிய செயலாளர் கே.எஸ். சண்முகநாதன், பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, கடலாடி வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆப்ப னூர் ஆறுமுகவேல், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியச் செய லாளர் பூபதிமணி, சாயல்குடி மேற்கு ஒன்றியச் செயலா ளர் ஜெயபாலன், சாயல்குடி கிழக்கு ஒன்றியச் செயலா ளர் குலாம் முகைதீன், நேர்முக உதவியாளர்கள் கண்ணன்,  ரஞ்சித் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தனியார் சிமெண்ட் ஆலை இடத்தில் பெண் உடல் மீட்பு

விருதுநகர், செப்.6- விருதுநகர் அருகே உள்ளது தனியார் சிமெண்ட் ஆலை. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான கல்குவாரி நிலம் ஓ.கோவில்பட்டி பகுதியில் உள்ளது. இப்பகுயில் உள்ள  சாலையை பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டி கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அங்கு அழுகிய நிலையில் சுமார் 35 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கிடப்பதாக  அவ்வழியே சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கன்னிசேரிபுதூர் கிராம நிர்வாக அலு வலர் செந்தில்குமார், வச்சக்காரப்பட்டி காவல்நிலை யத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி  வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி:  சிறப்பு பேருந்து இயக்கம்

மதுரை, செப்.6-  விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை யொட்டி மதுரையிலிருந்து வெள்ளி, சனி ஆகிய 2 நாட்கள்  சிறப்புபேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மதுரையிலிருந்து திருச்சி, கோவை, திருப்பூர் ஆகிய  முக்கிய ஊர்களுக்கு 6 - 7 தேதிகளில் 75 பேருந்துகளும்; மதுரையிலிருந்து - சென்னை கேளம்பாக்கத்துக்கு 8.9.2024  ஞாயிறு அன்று, மதுரை மற்றும் தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் பகுதியிலிருந்து 120 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற முக்கிய  ஊர்களுக்கு 100 பேருந்துகள் இயக்க சிறப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டைக்கு வந்த புதிய ரயிலுக்கு வரவேற்பு

அருப்புக்கோட்டை, செப்.6- மைசூர் -செங்கோட்டை ரயில் அருப்  புக்கோட்டைக்கு வந்தது. அங்கு சிறப்பான  வரவேற்பளிக்கப்பட்டது. காரைக்குடியில் இருந்து மைசூர் வரை  அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில், தற் போது செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்  யப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழ னன்று  முதன்முறையாக மைசூரில் இருந்து  செங்கோட்டை சென்ற இந்த சிறப்பு ரயில்    அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அங்கு தயாராக இருந்த ரயில்  பயணிகள் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு  அளித்தனர். பின்னர் ரயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்தும் கடலை உருண்டை வழங்கியும் வரவேற்பு அளித்தனர். மேலும், அந்த ரயிலில் பயணம் செய்த  பயணிகளுக்கும் கடலை உருண்டை களை  வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த ரயில், அருப்புக் கோட்டை வழியாக  வியாழன் மற்றும் ஞாயிறு  ஆகிய 2 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கோட்டையில் இருந்த  புறப்பட்டு விருதுநகர், அருப்புக்கோட்டை,  மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, சேலம்,  நாமக்கல் வழியாக பெங்களூர் மற்றும் மைசூரு வரை செல்கிறது. இந்த நிகழ்ச்சி யில் அருப்புக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஆனந்தன், செயலாளர் சரவணன், ஆலோசகர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.