பெரம்பலூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்த இப்பேரணியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகள், குழந்தைத் திருமணம் தடுப்பு போன்ற முக்கிய விழிப்புணர்வு வாசகங்களுடன் பேரணி பாலக்கரையில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.