மயிலாடுதுறை, செப்.14 - மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் அருகேயுள்ள காட்டுச்சேரி சிறு விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான தட களப் போட்டி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலாடு துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெகநா தன் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய் வாளர் உமாநாத் முன்னிலை வகித்தார். சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் பிர பாகர் வரவேற்றார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், போட்டிகளை துவக்கி வைத் தார். மாவட்ட தடகளப் போட்டியில், மயிலாடு துறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலு காக்களில் குறுவட்ட அள வில் நடைபெற்ற போட்டி யில் வெற்றி பெற்ற 230 பள்ளி களைச் சேர்ந்த 680 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டு தல், குண்டு எறிதல், ஈட்டி எறி தல் என மொத்தம் 86 தட களப் போட்டிகள் நடை பெற்றன. இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவ-மாணவி களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டு மாநில அளவில் நடை பெறும் போட்டிக்கு தகுதி பெறுவர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் களை எம்எல்ஏ வழங்கி பாராட்டினார்.