districts

திருச்சி முக்கிய செய்திகள்

அனைத்துத் துறை  பணிகள் ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை, செப்.10 - புதுக்கோட்டை மாவட் டத்தில் அனைத்துத் துறை சார்ந்த பணி களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்,  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் ஆகி யோர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னிலையில் திங்கள்கிழமை நடை பெற்றது. கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பி னர் எம்.எம்.அப்துல்லா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல்,  புதுக்கோட்டை மாநக ராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

மண்புழு உற்பத்தி பயிற்சி

பாபநாசம், செப்.10 - அட்மா திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோயிலில் மண் புழு உற்பத்தி பயிற்சி நடந் தது. இதில் மண் புழு வளர்ப்பு முன்னோடி விவ சாயி கலைவாணி, மண்  புழு வளர்ப்பு, மண் புழு  உரம் வயலுக்கு இடுவ தால் ஏற்படும் நன்மை குறித்து விளக்கினார். பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் முகமது  பாரூக், மண் புழு உரம்  தயாரிப்பு, ஒருங்கி ணைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகத் தில் செயல்படுத்தப் படும்  திட்டங்கள் பற்றி கூறி னார். வேளாண்மை அலு வலர் நடராஜன் வேளா ண்மை விரிவாக்க மையங் களில் வழங்கப்படும் உயிர் உரங்கள், விதை நெல், நுண்ணூட்டம் பற்றி கூறினார். 

கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை

மயிலாடுதுறை, செப்.10 - மயிலாடுதுறை மாவட் டம், குத்தாலம் புது  நகரில் தனது மனைவி யுடன் வசிப்பவர் ஓய்வு பெற்ற  தமிழாசிரியர் கலைவேந்தர் (86).  இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல் களை எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த செப்.7 அன்று பட்டப்பக லில் மர்ம நபர்கள் ஆசிரி யர் வீட்டின் உள்ளே புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி பீரோவில் இருந்த ரூ. 20  ஆயிரம் பணத்தை கொள் ளையடித்துச் சென்றுள்ள னர். மர்மநபர்கள் ஆசிரி யர் வீட்டுக்குச் செல்வ தும், அங்கே கொள்ளை அடித்து விட்டு, வெளியே ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.  இச்சம்பவம் குறித்து கலைவேந்தர் அளித்த புகாரின் பேரில் குத்தா லம் காவல் நிலைய போலீ சார் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசா ரணை மேற்கொண்டனர். அதில், இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குத்தாலம் பஞ்சுக்கார செட்டித் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (28),  நடுசெட்டித் தெருவைச் சேர்ந்த சிறுவர்கள் ஸ்ரீ ஹரி (15), ஹரிஹரன்(14) ஆகிய 3 பேரை கைது செய்தனர். சிறுவர்களை தஞ்சை சீர்திருத்த பள்ளியிலும், விக்னேசை சிறையிலும் அடைத்த காவல்துறை தலைமறைவான அஜய் என்ற இளைஞரை தேடி வருகின்றனர்.

யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தாட்கோ

திருச்சிராப்பள்ளி, செப்.10 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக டாக்டர் அம்பேத்கர் அகா டமி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர் களுக்கு ஒரு வருடகாலம் யுபிஎஸ்சி தேர்வுக் கான (பொது அறிவு மற்றும் விருப்ப பாடங்கள்) முதல் நிலை – முதன்மை நிலை  பயிற்சியை வழங்கவுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் (யுபிஎஸ்சி) தேர்வுக்கு தேர்வு  எழுத தகுதியான மாணாக்கர்கள் Screening test மூலம் தேர்வு செய்யப்பட்டு, தேர்ச்சி  பெற்ற மாணாக்கர்கள் நேர்முக தேர்வின்  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் முதற் கட்டமாக தகுதியுள்ள 100 மாணாக்கர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியைப் பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஒரு வருடம்.  விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக் கான செலவின தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். பயிற்சியினை பெற தாட்கோ இணைய தளம் www.tahdco.com என்ற முகவரியில்  பதிவு செய்யவும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவல கச் சாலை, திருச்சிராப்பள்ளி – 620001. (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரி வித்துள்ளார். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, புதுக்கோட்டை என்ற முகவரி அல்லது 04322-221487 என்ற தொலைபேசி எண்ணில் தொ டர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், செப்.10 - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற் குட்பட்ட, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.  ஏலத்தில் பாபநாசம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதி களான மதகரம், சத்தியமங்கலம், கோபுராஜபுரம், வலங்கை மான், அய்யம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து சுமார்  20 விவசாயிகள் விற்பனைக்காக 26 மெ.டன் பருத்தியை எடுத்து வந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், பழனி,  பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 5  வணிகர்கள் அதிகபட்சம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8,599, குறைந்தபட்சம் ரூ.7519, சராசரி ரூ.7700 என விலை நிர்ணயித்த னர். பருத்தியின் மொத்த மதிப்பு ரூ.203 லட்சம்.  பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனைக்கூட கண்காணிப் பாளர் தாட்சாயினி தலைமை வகித்தார். மேலும் பாபநாசம்  ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரத்தில் எள்  அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.12000-க்கு விற்ப னையானது. உளுந்து, பச்சைப்பயறு, கொப்பரை மற்றும்  பாரம்பரிய நெல் வகைகளும் ஏல முறையில் தரத்திற்கேற்ப  நல்ல விலைக்கு விற்பனை செய்து தரப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர்கள் மீது  பிற துறை பணிகளை திணிக்க எதிர்ப்பு

தஞ்சாவூர், செப்.10 - டிஜிட்டல் கிராப் சர்வே பணியினை கிராம நிர்வாக அலுவ லர்கள் மீது திணிக்கும் வருவாய் நிர்வாகத்தை கண்டித்து,  தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பில், திங்கட்கிழமை பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்  சங்க வட்டத் தலைவர் ஜி.செல்வம் தலைமை வகித்தார். கோட்டப் பொறுப்பாளர் கே.இளைய பாரதி முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் எஸ்.ரவி கோரிக்கை விளக்க  உரையாற்றினார். இதில், 21 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  பிற துறை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது  திணிக்கக் கூடாது. வேளாண்துறை பணியான டிஜிட்டல் கிராப்  சர்வே பணியை கிராம அலுவலர்கள் மீது திணிக்கக் கூடாது.  டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு பிற மாநிலங்களைப் போல்  கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு தேவையான உபகரணங்களை வழங்க  வேண்டும். பேச்சுவார்த்தை உடன்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டவர் கைது

தஞ்சாவூர், செப்.10 - இளைஞரைத் தாக்கி கைப்பேசியைப் பறித்துச் சென்ற வரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்த னர். தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர்.  இவர் தனது வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  கைப்பேசியில் தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அன்வரைத் தாக்கிவிட்டு, கைப்பேசியைப் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து கிழக்கு  காவல் நிலையத்தில் அன்வர் புகார் செய்தார். அதன்பே ரில் காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராவில் பதி வான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை  நடத்தினர். இதில், தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்த பிரவீன் (24), வடக்கு அலங்கத்தைச் சேர்ந்த பாலாஜி (29)  ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது.  இதையடுத்து, பாலாஜியை காவல் துறையினர் திங்கள் கிழமை கைது செய்து, அவரிடமிருந்து பறிக்கப்பட்ட கைப்பேசி, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு  சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிர வீனை தேடி வருகின்றனர். விரைவாக செயல்பட்டு பாலாஜியை கைது செய்த நக ரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா.சோமசுந்தரம்,  உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான தனிப் படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பாராட்டினார்.

வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

கும்பகோணம், செப்.10- தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தர வின்படி, குற்றத் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் தனிப்படை கள் உருவாக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய எல்லைக் குட்பட்ட ஜலசங்கர மாரியம்மன் கோவில், டாக்டர் மூர்த்தி ரோடு பகுதியில் கடந்த ஜூலை 11 அன்று நடந்த திருட்டு  வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான சாகுல் ஹமீது மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கண்காணித்து தேடி வந்தனர்.  இந்நிலையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்ப டையில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் இருவரையும் கைது செய்து, வழக்கின் தடய  பொருட்களான 2.5 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 இரு  சக்கர வாகனங்களை கைப்பற்றினர். மேலும் குற்றவாளி கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக துணைக் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை பிரிவினரை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பாராட்டினர்.

சவால்களை சமாளிக்கும் வளங்களை வளர்த்தால் மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்பு குறைவு மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் பேச்சு

புதுக்கோட்டை, செப்.10 - சவால்களை சமாளிக்கும் வளங்களை ஒவ்வொரு வரும் வளர்த்துக் கொண்டால் மன உளைச்சல் ஏற்படுவ தற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றார் மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம். புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நாட்டு நல பணித்திட்டத்தின் சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அவர் பேசிய தாவது: மன ஆரோக்கியம் என்பது ஒரு மனிதன், தனது முழு  திறன்களை உணர்ந்து வெளிப்படுத்துவதுடன், அன்றாட  வாழ்வில் ஏற்படும் அழுத்தங்களையும் சவால்களையும் நேர்மறையாக எதிர்கொண்டு குடும்பத்திற்கும் சமூகத் திற்கும் பயன்படும் வகையில் வாழும் நிலையை குறிப்பதாகும்.  குடும்பம் மற்றும் சமூகத்திற்கு தேவையான செயல்பா டுகளை முன்னெடுப்பதன் மூலம் மன உளைச்சலில் இருந்து நாம் தற்காத்துக் கொள்ளலாம். பொதுவாக வாழ்க்கையில் ஒரு விசயத்தை அடைவதற்கு தேவை யான வளங்கள், நம்மிடம் இருக்கக் கூடிய வளங்கள் இரண்டிற்கும் இடையே இடைவெளி அதிகமாக இருந்தால், மன உளைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் சவால்களை சமாளிக்கும் அளவிற்கு நம்முடைய வளங் களை வளர்த்துக் கொண்டால் மன உளைச்சல் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.  வாழ்க்கை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஏதேனும்  தோன்றினால் தயங்காமல் நமக்கு நம்பிக்கையான வர்களிடம் அல்லது மருத்துவரிடம் சென்று பகிர்ந்து உரிய  ஆலோசனைகள் பெறலாம். இதன்மூலம் வாழ்க்கை பற்றிய எதிர்மறை எண்ணங்களில் இருந்து முழுமை யாக மீண்டு வர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. தொடர்ந்த அவதூறு வழக்கில் செப்.13 இல் நீதிமன்றத்தில் ஆஜராவேன் : சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி, செப்.10- முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்  பாளை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது.  இதனை சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.வை சேர்ந்த வழக்கறிஞர் எனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் திங்கட்கிழமை நான் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது.  ஆனால் அது தொடர்பாக எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. எனது தனி பாதுகாவலரிடம் சம்மன் சென்றதாகவும், அதை அவர் வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லை. எனினும் எனது வழக்கறிஞர்கள் கடந்த 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன்.  அ.தி.மு.க. வழக்கறிஞர் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.