திருச்சிராப்பள்ளி, ஜூலை 16 - தமிழக அரசின் நிரந்தரத் திட்டத்தில் பணி யாற்றும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக் கொடையை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமா கவும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்ச மாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும். காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். உணவு மானியத்தை குழந்தை ஒன்றுக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு மையங்களுக்கு எரிவாயு சிலிண்டரை அரசே நேரடியாக வழங்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் நட வடிக்கையை அரசு கைவிட வேண்டும். அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல சத்துணவில் பணியாற்றும் பெண் ஊழி யர்களுக்கும் 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட தலைவர் சத்யவாணி தலைமை வகித்தார். பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி தொடங்கி வைத் தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செய லாளர் அல்போன்ஸா, மாநில துணைத்தலை வர் பெரியசாமி, மாவட்டப் பொருளாளர் கிரேஸி லில்லி ஆகியோர் பேசினர். முன்னதாக வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவிலிருந்து தொடங்கிய பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலை யத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் பெ.அன்பு தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.சீத்தா லெட்சுமி பேசினார். பேரணியை தொடங்கி வைத்து அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜபருல்லா உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ரெங்கசாமி, சத்து ணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலா ளர் கு.சத்தி மற்றும் தோழமைச் சங்க நிர்வாகி கள் வாழ்த்திப் பேசினர். பேரணியை நிறைவு செய்து சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.மலர்விழி சிறப்புரை யாற்றினார்.
தஞ்சாவூர்
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் தொடங்கிய பேரணி பனகல் கட்டிடம் முன்பு நிறை வடைந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.வீரா சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் சிவ.ரவிச்சந்திரன் பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் தி.ரவிச்சந்திரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சா.கோ தண்டபாணி சிறப்புரையாற்றினார்.