புதுக்கோட்டை, நவ.9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியச் செய லாளராக ஏ.லாசர் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய மாநாடு ஏ. லாசர், எஸ்.மாலா, பால்ராஜ் ஆகியோர் தலைமை யில் சனிக்கிழமை வெட்டன் விடுதியில் நடைபெற்றது. ஏ. அண்ணாத்துரை கொடி யேற்றினார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், த.அன்பழகன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.பாலசுந்தரமூர்த்தி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் 14 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியச் செயலாளராக ஏ.லாசர் தேர்வு செய்யப் பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமண வாளன் நிறைவுரையாற்றி னார்.