districts

img

பெரம்பலூரில் விரைவில் மருத்துவக் கல்லூரி அமையும்

பெரம்பலூர், நவ.5 - பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப  சுகாதார நிலையங்கள் மற்றும்  துணை சுகாதார நிலையங்கள்,  அரசு தலைமை மருத்துவமனை யில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்து வப் பிரிவு கட்டடங்களை மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகி யோர் திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் செவ்வாய்க் கிழமை கை.களத்தூர் அரசு ஆரம்ப  சுகாதார நிலையத்தில் நடைபெற்ற  இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். அருண்நேரு, பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மற்றும் அரிய லூர் மாவட்டங்களில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பல கட்டடங்கள் கட்டப்பட்டு வரு கின்றன. ரூ.45 லட்சம் மதிப்பில் பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டண படுக்கை பிரிவு கட்டிடப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. அது விரைவில் மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வரப்ப டும். சென்னை ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில் மட்டுமே இருந்த கட்டண படுக்கை பிரிவுகள்,  தற்போது மாநிலம் முழுவதும் விரி வாக்கம் செய்யப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட ஆதனூர், மருவத்தூர், கொளக் காநத்தம், இலப்பைகுடிகாடு, கூடலூர், அகரம் சீகூர் மற்றும்  சிறுகன்பூர் பகுதிகளிலும், பெரம்ப லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசும்பலூர், வாலிகண்டபுரம், அம்மாபாளையம், சிறுவயலூர், செஞ்சேரி மற்றும் லாடபுரம் கிழக்கு  ஆகிய பகுதிகளிலும் மொத்தம் ரூ.7.75 கோடியில் துணை சுகாதார  நிலையம், வட்டார பொது சுகாதார  அலகு, ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடை பெற்று கொண்டிருக்கின்றன.  விரைவில் தமிழ்நாட்டில் 50  புதிய ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார  நிலையங்கள் தமிழ்நாடு முதல மைச்சரால் திறந்து வைக்கப்பட வுள்ளன. தமிழ்நாட்டில் 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை கள், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் என சுமார் 13,000-க்கும்  மேற்பட்ட அரசு மருத்துவமனை கள் உள்ளன. இவற்றையெல்லாம் மாவட்டம் வாரியான பயணங்க ளின்போது திடீர் ஆய்வு நடத்தி  பார்வையிடுவது என் வழக்கம். அதே போன்று இன்று காரை  அரசு மருத்துவமனை மற்றும் கிருஷ் ணாபுரம் அரசு மருத்துவமனை களில் திடீர் ஆய்வு செய்தோம்.  பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் காரை, கிருஷ்ணாபுரம், வேப்பூர், உடை யார்பாளையம் மற்றும் செந்துறை  ஆகிய 5 மருத்துவமனைகள் உள்ள தாக இணை இயக்குநர் தெரி வித்தார். இந்த மருத்துவமனை களில் மருத்துவர்களுக்கான பணி யிடத்தை நிரப்பாமல், தரம் உயர்த்தியுள்ளார்கள். கிருஷ்ணாபுரம் அரசு மருத்து வமனைக்கு ரூ.3.50 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ஆணை  வழங்கப்பட்டுள்ளது. காரை அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடியில் புதிய கட்டடம் கட்டும்  பணியும், வேப்பூர், உடையார்பா ளையம், அரசு மருத்துவமனை களில் தலா ரூ.3.50 கோடியில் புதிய  கட்டடங்களும் கட்டப்படவுள்ளன.  கடந்த கால ஆட்சியில் பெயர்  பலகையில் மட்டுமே அரசு  மருத்துமனைகளாக தரம் உயர்த்தப் பட்டவை, தற்போது புதிய கட்ட டங்கள், புதிய பணியிடங்கள் என வளர்ச்சியடைந்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், லப்பைக்குடிக்காடு வடக்கு, லப்பைக்குடிக்காடு தெற்கு, பெரம்பலூர் தெற்கு, சாமியப்பாநகர்,

பாளையம் ஆகிய  பகுதிகளில் ரூ.2.25 கோடியில்  துணை சுகாதார நிலையங்கள்  கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தில் மக்களை வீடு தேடிச்சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப் பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படு கிறது. இத்திட்டத்தை தொடங்கும்  போது, விரைவில் ஒரு கோடி  பயனாளிகளுக்கு இத்திட்டம் சென்று சேரும் என அறிவிக்கப் பட்டது. அதன்படி, தற்போது இத்திட்டம் 1,99,79,674 நபர்களை சென்றடைந்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் 2 கோடி பய னாளிகளுக்கு ‘தமிழ்நாடு முதல மைச்சர் மருந்து பெட்டகம்’ வழங்கப் படவுள்ளது. விபத்துக்குள்ளானோரை காப்பாற்றும் நம்மை காக்கும் 48  திட்டத்தில், சாலை விபத்து ஏற்பட்ட வுடன் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கும் நபருக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்த தோடு, விபத்துக்குள்ளான நபரை  விபத்து நடைபெற்ற 48 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.1லட்சம் அரசு ஊக்கத்தொகை வழங்கப் படும் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் 2021 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தில் 2,99,631 பேர்  பயன் பெற்றுள்ளார்கள். மேலும், 1  லட்சம் என்ற ஊக்கத்தொகை யினை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, முத்து லட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டம், மக்களைத் தேடி மருத்து வம் திட்டம், யானைக்கால் நோய் தடுப்பு திட்டம், தேசிய தொழுநோய்  தடுப்பு திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம் உள்ளிட்ட பல  திட்டங்களின் கீழ் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை  அமைச்சர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் பொது சுகாதா ரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை (சென்னை) இணை இயக்கு நர் (ஆரம்ப சுகாதார நிலையங்கள்) மரு.செந்தில்குமார், இணை இயக்குநர் மரு.மாரிமுத்து, மாவட்ட  சுகாதார அலுவலர் மரு.எம்.கீதா,  மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.ஜாக்குலின் சித்ரா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று முன்னாள் முதல்வர் கலைஞர் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தார்.  அதனை தொடர்ந்து மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பெரம்பலூரை சேர்த்து ஆறு மாவட்டங்களில் அதாவது பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி வரவில்லை என்றும் அதனை கூடிய விரைவில் வர வைக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.  அதில் விரைவாக ஒன்று, இரண்டு கல்லூரிகள் கிடைத்தாலும் அதில் முதன்மையாக பெரம்பலூருக்கு கொடுக்கப்படும். மேலும், செவிலியர் காலிப் பணியிடங்கள் உட்பட மூன்று ஆண்டுகளில் 7500 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன” என்றார்.