districts

திருச்சி முக்கிய செய்திகள்

எய்ட்ஸ் விழிப்புணர்வு  பிரச்சாரம்

புதுக்கோட்டை, செப்.9 - எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த தீவிர விழிப்பு ணர்வு பிரச்சார மனித  சங்கிலியினை புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர்  மு.அருணா திங்கள் கிழமை தொடங்கி வைத் தார்.  பின்னர் அவர் தெரி விக்கையில், “புதுக் கோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் பாதிப்பு  அதிகம் உள்ள பகுதிகளில் கிராமிய கலைநிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர் வினை ஏற்படுத்தும் நாட்டுப் புற கலைநிகழ்ச்சி, மக்கள் பயணிக்கும் ஆட் டோக்களில் விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டுதல்,  விழிப்புணர்வு கையெ ழுத்து இயக்கம் மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு மனித சங்கிலி ஆகிய நிகழ்ச்சிகள் துவக்கி வைக் கப்பட்டன. எச்.ஐ.வி, எய்ட்ஸ் பாதிப்பு இல்லா  மாவட்டமாக புதுக் கோட்டை மாவட்டத்தை மாற்றிட அனைத்துத் துறை அரசு அலுவலர் களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்” என்றார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப் பாடு அலுவலர் மாவட்ட  சுகாதார அலுவலர் எஸ். ராம்கணேஷ், மாவட்ட சுகாதார அலுவலர் நமச் சிவாயம் (அறந்தாங்கி)  உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததால்  தீ விபத்து

திருவாரூர், செப்.9 - விநாயகர் சதுர்த்தியை யொட்டி, திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதி யில் பல்வேறு இடங்களில் விநாயகர் ஊர்வலம் நடை பெற்றது. இதில் குடவாசல் கோ னேஸ்வரர் ஆலயம், திருக்குளம் தென்கரையில் இருந்து மாலை 6 மணி யளவில் புறப்பட்ட விநாய கர் ஊர்வலத்தில் வெடி  வெடித்தனர். அப்போது எழுந்த தீப்பொறி திருக் குளத்தில் விழுந்ததில், குளத்தில் காய்ந்த நிலை யில் இருந்த புல் மற்றும் செடி கொடிகள், குப்பை கழிவு கள் தீப்பற்றி எரிந்தன. தீ விபத்து காரணமாக கடைவீதி பகுதியில் புகை சூழ்ந்தது. இதனால் சாலை யில் சென்ற வாகன ஓட்டி கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அவதிய டைந்தனர். விபத்தைத் தொடர்ந்து குடவாசல் தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொண்டபோது, குடவாச லில் உள்ள தீயணைப்பு வண்டி, கொரடாச்சேரி அருகே உள்ள பத்தூர் மேலகரையில் மூங்கில் உரசி தீப்பற்றிய இடத்திற்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது. தீயணைப்பு வண்டி நிகழ்விடத்திற்கு வராததால், தொடர்ந்து தீ  எரிந்தது. இதனால் அந்தப்  பகுதியே புகை மண்டல மாக காட்சியளித்தது.

செப்.14-இல் குறைதீர் கூட்டம்

கரூர், செப்.9 - கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட  மக்கள் குறைதீர் கூட்டம்  14.9.2024 அன்று காலை  10 மணி முதல் 1 மணி  வரை, கரூர், அரவக் குறிச்சி, மண்மங்கலம், புக ளூர், குளித்தலை, கிருஷ் ணராயபுரம் மற்றும் கடவூர்  வட்ட வழங்கல் அலுவல கங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி யர் மீ.தங்கவேல் தெரி வித்துள்ளார்.

வக்பு திருத்தச் சட்டத்தை  கைவிடக் கோரிக்கை

பாபநாசம், செப்.9 - வக்பு திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில்,  நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்புவதற்காக  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மூலமாக க்யூ ஆர்  கோடு வெளியிடப்பட்டது. இதன்மூலம் பாபநாசம் வட்டாரத்தில்  திரளானோர் மின்னஞ்சல் அனுப்பினர். அய்யம்பேட்டை அஞ்சு மன் பள்ளிவாசலில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரி யத்தின் உறுப்பினரும், பாபநாசம் எம்.எல்.ஏவும், தமிழக முஸ்லீம்  முன்னேற்றக் கழகத்தின்  தலைவருமான ஜவாஹிருல்லா முன்னி லையில் ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பினர்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பயிற்சி 

தஞ்சாவூர், செப்.9   தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்திய  அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி- 2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக டாக்டர் அம்பேத்கர் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள  முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு ஒரு  வருட காலம் UPSC தேர்வுக்கான (பொது அறிவு மற்றும்  விருப்பப் பாடங்கள்) முதல் நிலை-முதன்மை நிலை பயிற்சி யினை வழங்கவுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (UPSC) தேர்வை எழுத தகுதியான மாணாக்கர்கள் Screening test-க்கு தேர்வு செய்யப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து, முதற்கட்டமாக தகுதியுள்ள 100 மாணாக்கர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற வர்களும், 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களாக இருக்க  வேண்டும். பயிற்சிக்கான கால அளவு ஒரு வருடம். விடுதி யில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையும் தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com  என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என  மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

செப்.23-இல் ஓஎன்ஜிசி ஆலை முன்பு  தொழிலாளர்கள் குடியேறும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

திருவாரூர், செப்.9 - திருவாரூர் அருகே அலிவலம் கிரா மத்தில் ஓஎன்ஜிசி  நிறுவனம் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் சுமார் 15 தொழிலா ளர்கள், ஒப்பந்த அடிப்படையில் சுமார் 37 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பிஎப் பிடித்தம்  செய்துள்ளனர். ஆனால் தற்போது அவர் களுக்கு மாற்று நிரந்தரப் பணியையோ,  வாழ்வாதாரத்திற்கான உதவித்தொகை யையோ கொடுக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முன்  வரவில்லை. இதனால் பலமுறை சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும்  போராட்டங்கள் நடத்தியும் நிர்வாகம் செவி  சாய்க்கவில்லை. வேலை இழந்த விரக்தியில் உள்ள தொழி லாளர்கள் அனைவரும் கடந்த 14.07.24 அன்று  ஓஎன்ஜிசி நிறுவனத்தின் அலிவலம் பகுதியில்  செயல்பட்ட பிளாண்ட் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு காவல் நிலையத்தில், நிறுவனத்தின் சார்பில்  ஓஎன்ஜிசியின் உயர் அதிகாரிகள், காவல் ஆய்வாளர் முன்பு சமாதானக் கூட்டம் நடை பெற்றது. அதில், 15.8.2024-க்குள் இந்த தொழி லாளர்களின் பட்டியல் சரிபார்க்கப்பட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறோம் என்று அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர். ஆனால், இது வரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. இதனால் நிர்வாகத்தை கண்டித்து  செப்.23 அன்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்  குடும்பங்களுடன் தொடர் மறியல் போராட் டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திருவாரூர் ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாநகராட்சி கவுன்சிலர்

சிவகாசி, செப்.9- சிவகாசி மாநகராட்சிக்குட்பட்டது திருத்தங்கல் 5வது வார்டு. இப்பகுதி யின் உறுப்பினராக இருந்து வருபவர் இந்திராதேவி. இங்கு மேல்நிலை  நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து  குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.   இந்தநிலையில், குடிநீர் தொட்டியில் பொருத்தப்பட்டிருந்த பல லட்சம்  ரூபாய் பெறுமான மின் மோட்டார் உள் ளிட்ட பொருட்கள் மாயமான தாக கூறப்படுகிறது. இதனால் 5 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதி களுக்கு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தியிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இத னால், ஆத்திரமடைந்த உறுப்பினர் இந்திராதேவி, மாநகராட்சி அலுவல கம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடன் அவரது  கணவரும் இருந்தார். தகவலறிந்து வந்த போலீசார் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். முடிவில் உரிய  ஆய்வு நடத்தி, தவறு நடந் திருக்கும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநக ராட்சி ஆணையாளர் உறுதியளித்தார். இதையடுத்து இருவரும் பேராட் டத்தை முடித்துக் கொண்டனர்.

மினி வேன் மோதி தொழிலாளி பலி

நத்தம், செப்.9- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணக்காட்டூர்-மேற்குபட்டியை சேர்ந்தவர் ராசு (எ) பிச்சை (60). கூலித் தொழிலாளி. இவர் திங்களன்று தனது பைக்கில் அதே பகுதியை சேர்ந்த அழகுராஜா (27) என்பவருடன் செந்துறைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.  செந்துறை - சார்பதிவாளர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த போது, செந்துறை நோக்கி சென்ற மினிவேன் பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் ராசு சம்பவ இடத்திலேயே பலியானார். அழகுராஜா பலத்த காயங்களுடன் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளுக்குவேலைக்குச் செல்வோர்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இந்திய வெளியுறவுத் துறை அலுவலர் தகவல்

தஞ்சாவூர், செப்.9 -  வெளிநாடு செல்பவர்கள், பதிவு பெற்ற முகவர்களை அணுகி, பாதுகாப்பாக சென்று  வருவது தொடர்பாக, முன் பயண புத்தாக்க  பயிற்சி மையம் அமைப்பது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்ச கத்தின் குடிபெயர்வோர் பாதுகாவலர் எம்.ராஜ்குமார், தானம் அறக்கட்டளையைச் சேர்ந்த சந்தானம் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்தை நேரில் சந்தித்து கலந்தாலோசனை மேற்கொண் டனர். இக்கூட்டத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக தமிழகத்தின் குடிபெ யர்வோர் பாதுகாவலர் எம்.ராஜ்குமார் தெரி வித்ததாவது: வெளிநாடுகளுக்கு செல்வோர், இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தால் பதிவு செய்யப்பட்ட முகவர்களை அணுகி முறையான வழியில் செல்ல வேண்டும். முறையான வேலை விசா வாங்கித்தான் செல்ல வேண்டும். கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்யும் போது மிகுந்த கவனம் தேவை.  தஞ்சை மாவட்டம் ஆட்சியர் அலுவல கத்தில், PDOT பயிற்சி மையம் துவங்கப் பட்டு வெளிநாடு செல்வோர்க்கு தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு உதவி எண்.  90421 48222 (வாட்ஸ் அப் நம்பர்)-ஐ தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் கலந்து கொண் டார்.