districts

img

பணத்திலான கிரீடம் அணிவித்து ஊழியர்களை கௌரவித்த தொழிலதிபர்

மயிலாடுதுறை, அக்.25 - மயிலாடுதுறை மாவட்டம் பொறை யாரில் தனது நிறுவனத்தில் பணியாற் றும் ஊழியர்களுக்கு   ரூபாய் நோட்டு களால் செய்யப்பட்ட கிரீடத்தை அணி வித்து தீபாவளி பரிசு வழங்கிய  தொழி லதிபருக்கு பாராட்டுகள் குவிகிறது. பொறையார் அருகேயுள் எருக்கட் டாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளம் தொழிலதிபர் ஏ.கே சந்துரு. அவரு டைய நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தீபாவளி  பண்டிகையையொட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஊழியர்கள் அனை வரையும் அழைத்து அவர்களுக்கு 20  ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளால் ஆன  கிரீடங்கள் அணிவித்து புத்தாடை, பட்டாசு, இனிப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கி கௌரவித்து வாழ்த்து களை பகிர்ந்து கொண்டார். பணத்தால் ஆன கிரீடம் அணி வித்து தீபாவளி பரிசளித்ததால் ஊழி யர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளையும், வாழ்த்து களையும் தெரிவித்து வருகின்றனர். ஊழியர்களின் உழைப்பால் மட்டுமே நான் உயர்ந்துள்ளதாகவும் இவர்கள் இல்லை என்றால் நான் இல்லை என்றும் இளம் தொழிலதிபர் சந்துரு பெருமிதத் துடன் தெரிவித்துள்ளார்.