திருச்சிராப்பள்ளி, மார்ச் 2 - திருச்சி மாநகராட்சி 35 ஆவது வார்டு கவுன்சிலராக சிபிஎம் எஸ்.சுரேஷ் பதவி ஏற்றுக் கொண்டார். திருச்சி மாநகராட்சி தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா புதனன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. பதவி ஏற்பு விழாவுக்கு வந்த கவுன்சிலர் களை பொறியாளர் அமுதவல்லி வரவேற் றார். பின்னர் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 1 ஆவது வார்டு கவுன்சிலரில் தொடங்கி 65 வார்டு கவுன்சிலர்களுக்கும் தனித்தனி யாக ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 35 ஆவது வார்டில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சி லர் எஸ்.சுரேஷ் பதவியேற்றார்.