குறைதீர் கூட்டத்தில் 330 மனுக்கள்
புதுக்கோட்டை, ஜன.20- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கத்தில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதி யோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 330 மனுக்களை பொதுமக்கள் அளித்த னர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற் கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஜன.26 இல் டிராக்டர் பேரணி
திருச்சிராப்பள்ளி, ஜன.20 - திருச்சி மிளகுபாறை யில் உள்ள இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகம் மாணிக்கம் இல்லத்தில் திங்களன்று ஐக்கிய விவ சாயிகள் முன்னணியின் மாவட்ட கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை வகித்தார். ஜன.26 அன்று திருச்சி இரட்டை வாய்க்காலில் துவங்கி அல்லிதுறை வரை டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க நடராஜன், ஜன நாயக சமூக நல கூட்ட மைப்பு சம்சுதீன், மக்கள் அதிகாரம் செழியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பழனிசாமி, கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
ஜன.26 இல் கிராம சபைக் கூட்டம்
தஞ்சாவூர், ஜன.20 - தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள கிராம ஊராட்சிகளில் குடியரசு தின கிராம சபைக் கூட்டம் ஜன.26 அன்று நடைபெற உள்ளது. இதில் பொது மக்கள் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “குடியரசு தின கிராம சபை கூட்டம், ஜன.26 அன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலு வலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர். எனவே, தஞ்சாவூர் மாவட் டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொது மக்கள் பங்கேற்க வேண்டும்” என்றார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, ஜன.20 - புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஜன.24 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக் கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்து உள்ளார்.
ஜன.24-இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை/திருச்சிராப்பள்ளி, ஜன.20 - படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனி யார் துறைகளில் பணிய மர்த்தம் செய்யும் நோக்கத் தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஜன.24 அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறு வனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியுடைய, 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை நாடும் இளை ஞர்கள், தங்களது சுய விவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச் சான்று நகல் களுடன் கலந்து கொள்ள லாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயி லாக பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி யர் மு.அருணா தெரிவித் துள்ளார். திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தால் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.24 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. மேலும் தகவல் களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901, 94990-55902 என்ற தொலை பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
பொய் வழக்கு போடும் காவல்துறை சுமைப் பணி தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு
திருச்சிராப்பள்ளி, ஜன.20 - சிஐடியு சுமைப் பணி சங்க மாவட்டக் குழு கூட்டம் திங்களன்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சுமைப் பணி சங்க நிர்வாகிகள் சிவக்குமார், தக்காளிரமேஷ், கண்டேன்வால் விஜி, பழக்கடை கார்த்திக், மணி, குட்செட் சேகர் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பழக்கடையில் லோடு இறக்கும் தொழிலாளர்களுக்கு கூலி வழங்காமல் இருக்கும் வியாபாரியிடமிருந்து கூலி பெற்றுத் தர வேண்டும். சுமைப்பணி சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை காந்தி மார்க்கெட் காவல்துறையினர் திரும்பப் பெற வேண்டும். 3 மாதங்களாக 42 வேஸ்ட் பேப்பர் தொழிலாளர்கள் சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் வேலையிழந்து வருமானமின்றி பட்டினியில் பரிதவிக்கின்றனர். இந்நிலையில், இப்பிரச்ச னையில் வாய்தா, மேல் வாய்தா போட்டு இழுத்தடிக்கும் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த் துறை, காவல்துறை தலையிட்டு உடனே வேலை வழங்க வலியுறுத்தி ஜன.25 அன்று காந்தி மார்க்கெட் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சென்னை நண்பர்கள் கல்வி அறக்கட்டளை ரூ.3 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்
கும்பகோணம், ஜன.20 - சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் கல்வி அறக்கட்ட ளையின் (FECT) கல்வி உதவித்தொகை வழங்கும் விழா கும்பகோணத்தில் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நண்பர்கள் கல்வி அறக்கட்டளையின் நிறுவன தலைவர் தினேஷ் சந்திரசேகரன், நன்கொடையாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கும்பகோணம் மண்டல பொறுப்பாளர் எம்.எஸ்.துரைசாமி ஆகியோர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பித்தவர்களை விதிமுறை களுக்கு உட்பட்டு உரிய முறையில் பரிசீலித்தனர். அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்ட படிப்புகள், டிப்ளமோ, துணை மருத்துவ படிப்பு கள் மற்றும் பி.எச்.டி பயிலும் தகுதி வாய்ந்த 30 மாணவ-மாணவிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் எப்இசிடி அறக்கட்டளை மூலமாக இந்த கல்வியாண்டில் அரசு பள்ளியைச் சேர்ந்த தகுதி வாய்ந்த 30 மாணவ-மாணவி களுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கே.ரமேஷ் மற்றும் தலைமை ஆசிரியர் கே.லதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதுகலை கணித பாட ஆசிரியர் ஏ.லெஷ்மி நரசிம்மன் நன்றி கூறினார்.
நூற்றாண்டுகளாக இருந்த கல்லறைத் தோட்டம் இடிப்பு ஆட்சியர் தலையிட கோரிக்கை
பெரம்பலூர், ஜன.20 - பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில், “எங்களது கிராமத்தில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்திற்கு சொந்தமான நூற்றாண் டுகளுக்கும் மேல் பழமையான மற்றும் பயன்பாட்டில் இருந்த கல்லறைத் தோட்டம் கடந்த ஜன.8 அன்று நள்ளிரவு 11 மணிக்கு மேல் இடிக்கப்பட்டுள்ளது. கல்லறைத் தோட்டத்திற்கு அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாடாலூரைச் சேர்ந்த காலம் சென்ற பெரியசுவாமி நாயுடு வகையறாவினர் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி கல்லறை கட்டிடங்கள், புனிதப் படுத்தப்பட்ட சிலுவைகள் அனைத்தையும் தடயம் இன்றி ஜெ.சி.பி, டிப்பர் லாரிகளை கொண்டு இடித்து அள்ளிச் சென்றுள்ளனர். இதைகுறித்து பாடாலூர் காவல்துறை ஆய்வாளரி டமும், முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்த னர்.
சிறுமி பாலியல் வன்புணர்வு: இருவர் போக்சோவில் கைது
தஞ்சாவூர், ஜன.20 - அதிராம்பட்டினம் அருகே சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இரு வரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த இரு வாரத்திற்கு முன்பு 16 வயது சிறுமி ஒரு வர், தஞ்சாவூர் மாவட்டம் கீழத்தோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த கண்ணனின் மகன் அரவிந்த் (20) என்ற நப ருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நாளடைவில் இருவரும் செல்லிடப்பேசி வாயிலாக அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளனர். இதனிடையே தனிமை யில் சந்திக்க சிறுமியை அரவிந்த் அழைத்துள்ளார். அதனை நம்பி அரவிந்தை சந்திப்பதற்காக ராஜாமடம் சவுக்கு காட்டுப் பகுதிக்கு சிறுமி தனியாக சென்றி ருக்கிறார். அங்கு, அரவிந்த் அத்துமீறியதுடன் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வந்த அரவிந்தின் நண்பனும் கீழத்தோட்டம் பகுதியைச் சார்ந்த சக்திவே லின் மகன் சரண் (20) என்ப வனும் அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தாக கூறப்படுகிறது. இதனால் கதறி அழுத சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட இரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தகவ லறிந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கன்னிகா தலை மையிலான காவல்துறை யினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற் கொண்டனர். இதில், தப்பி யோடிய அரவிந்த் மற்றும் சரண் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.