districts

திருச்சி முக்கிய செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: தஞ்சையில்  24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

தஞ்சாவூர், அக்.10-  தஞ்சாவூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டு,  சுழற்சி முறையில் பணியாளர்கள் பணி புரிந்து வரு கின்றனர்.  பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான பாதிப்புகள், குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்-1077, தொலைபேசி எண்- 04362-2301213, வாட்ஸ்அப் எண்-93450 88997 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், பேரிடர்  தொடர்பாக TN – Alert என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த கைபேசி செயலியினை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் அப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, தங்களது பகுதியில் மழை போன்ற வானிலை முன்னறிவிப்பு செய்திகளையும், புகார் மற்றும் கோரிக்கைகளையும் தெரிவித்திடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,550 முதல்நிலை மீட்பாளர்கள், 300 ஆப்தமித்ரா தன் னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், அனைத்து துறைகளும் தயார்நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். 

புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முதியவர் பிணம் 

இராஜபாளையம், அக்.10- இராஜபாளையம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில்  சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். தக வலறிந்த தெற்கு காவல்நிலைய காவல்துறையினர் பிரே தத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த னர். விசாரணையில் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த  முத்தையா என்பவரது மகன் குருசாமி (60) திருமணமாக வில்லை, உடல் நலம் பாதிக்கப்பட்டு பேருந்து நிலையத்  தில் தங்கி இருந்தது தெரியவந்தது. இறந்த குருசாமிக்கு  இரண்டு சகோதரர்கள், சகோதரிகள் உள்ளனர்.