திருவாரூர், ஆக.22- திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சியில் மாரி யம்மன் கோவில் முகப்பி லுள்ள உபயோகத்தில் இல் லாத குட்டையை மூட வேண் டும். சாலை வசதிகளை ஏற் படுத்தித் தர வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்றித்தர வேண்டி வாலிபர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் பணி கள் துவக்கப்பட்டு முதற் கட்டமாக குட்டை தூர்க்கப் பட்டுள்ளது. மேலும் சாலை பணிகளும் நடைபெற்று வரு கின்றன. இப்பணிகளை சனிக்கிழ மையன்று சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பை யன், வாலிபர் சங்க ஒன்றி யத் தலைவர் சதீஷ் உள் ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் இப்பிரச்ச னைக்கு தீர்வு கண்ட வாலி பர் சங்கத்தின் புலிவலம் கிளை, திருவாரூர் ஒன்றி யக்குழுவினை பொதுமக் கள் வெகுவாக பாராட்டி வரு கின்றனர்.