districts

img

சாய்ந்து கிடக்கும் தகவல் பலகை சரிசெய்யப்படுமா?

திருவாரூர், மே 17 - திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் சார்பில் ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டம் முழுவதிலுமுள்ள பல்வேறு துறை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்குரிய தொலைபேசி எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த 2018 நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் போது, சாய்ந்த இந்த தகவல் பலகை தற்போது வரை மரக்கிளைகளுக்கு நடுவே சாய்ந்து கிடக்கிறது.  இந்த தகவல் பலகை சரிசெய்யப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.