districts

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் வளாகத்தில் தார்ச்சாலை அமைத்திடுக! சிபிஎம் கோரிக்கை

திருவாரூர், பிப்.4-  திருத்துறைப்பூண்டி வட் டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பாதையை தார்ச் சாலையாக அமைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் கே.ஜி.ரகுராமன், ஆட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியி ருப்பதாவது: திருத்துறைப்பூண்டி மன்னை சாலை பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்டாட்சியர், சார்பதி வாளர், ஊராட்சி ஒன்றியம், வட்ட வழங்கல், சார்நிலை  கருவூலம், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சி யர் உள்ளிட்ட அலுவலகங் கள் செயல்பட்டு வருகின்றன.  வட்டாட்சியர் அலு வலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் தங்கள் பணி நிமித் தமாக வந்து செல்கின்றனர். ஆனால், அலுவலகத்திற்கு செல்லும் பாதை முற்றிலும் மண் சாலையாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழி யுமாகவும் சேரும்  சகதியும் காட்சியளிக்கிறது.  எனவே, மாவட்ட ஆட்சி யர் இச்சாலையை சீர்படுத்தி  தார்சாலை அமைத்து வளா கம் முழுவதும் சிமெண்ட் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனு வில் கூறியுள்ளார்.