காவல்துறை வாகனங்கள் ஜன.17 பொது ஏலம் அறிவிப்பு
திருவாரூர், ஜன.10- திருவாரூர் மாவட்ட காவல்துறையில் காவல் பணிக்காக இயங்கி வந்த கழிவினம் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்களின் பொது ஏலம் 17.1.2022 (திங்கள்) அன்று காலை 10 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. காவல் வாக னங்களை பொது ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ள வர்கள் 17.1.2022 அன்று காலை திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைக்கு வந்து, வாகனங்களை ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் தெரிவித்துள்ளார்.
பழங்குடியினருக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி துவங்கியது
மயிலாடுதுறை, ஜன.10 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் டி.மணல்மேடு கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இதுவரை குடும்ப அட்டை இல்லாததால் எந்தவொரு அரசு சலுகையும் பெற முடியாத நிலை நீடித்து வந்தது. தற்போது நரிக்குறவர் சமூக மக்க ளின் நலன்கருதி குடும்ப அட்டை வழங்க அடிப்படை ஆதார மான ஆதார் அட்டை எடுக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஒப்புகை செய்தார்.
முழு ஊரடங்கு விதிமீறல்: வாகனங்கள் பறிமுதல்
திருவாரூர், ஜன.10 - கொரோனா (ஒமிக்ரான்) பரவலை முற்றிலும் தடுக்க வும், பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் 9.1.2022 அன்று மாவட்ட எல்லைகளில் 30 சோதனைச் சாவடிகள், 40 நிலையான ரோந்துகள், 34 இருசக்கர வாகன ரோந்துகள், 5 நெடுஞ் சாலை ரோந்துகள் அமைத்து மாவட்டம் முழுவதும் தொடர் வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இப்பணியில் சுமார் 600 காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் முகக்கவசம் அணியாமல் காரணமின்றி வெளியில் சுற்றித் திரிந்த 147 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 24 வாக னங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.