மயிலாடுதுறை, மே 4 - மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவி லான மாற்றுத்திறனாளி களுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டி புதன்கிழமை துவங்கியது. போட்டியை மாவட்ட ஆட்சி யர் இரா.லலிதா கொடிய சைத்து துவக்கி வைத்தார். தடகள போட்டிகளில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், கை ஊன முற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், குள்ளமானோருக்கு 50 மீ ஓட்டம், கால் ஊன முற்றோருக்கு குண்டு எறிதல், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 . சக்கர நாற்காலி ஆகிய போட்டிகளும், முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீ ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், மிக குறைந்த பார்வையற்றோ ருக்கு 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் டென்னிஸ் பந்து எறிதல் ஆகிய போட்டிகளும் நடைபெறுகின்றன. மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு புத்தி சுவா தினம் முற்றிலும் இருக்காது என்பதால், அவர்களுக்கு 50 மீ ஓட்டம், டென்னிஸ் பந்து எறிதல் மற்றும் நின்ற நிலை யில் தாண்டுதல் ஆகிய போட்டிகளும், புத்தி சுவா தினம் தன்மை நல்ல நிலை யில் இருப்பவர்களுக்கு 100மீ ஓட்டம் மற்றும் குண்டு எறி தல் ஆகிய போட்டிகளும், காது கேளாதோருக்கு 100மீ ஓட்டம், 200மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 400மீ ஓட்டம் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியாக நடைபெறுகின்றன. குழு விளையாட்டுப் போட்டியில் கை, கால் ஊனமுற்ற ஆடவர் மற்றும் மகளிருக்கு இறகுபந்து போட்டி (ஒற்றையர் மற்றும் இரட்டையர்) மற்றும் மேசைப் பந்து போட்டி, கண் பார்வை யற்ற ஆடவர் மற்றும் மக ளிருக்கு அடாப்டட் வாலி பால், மனநலம் பாதிக்கப் பட்ட ஆடவர் மற்றும் மகளி ருக்கு எறிபந்து போட்டி, காது கேளாத ஆடவர் மற்றும் மகளிருக்கு கபடி போட்டியும் நடைபெறுகிறது. புதன்கிழமை நடை பெற்ற போட்டிகளில் மயி லாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 200 மாற்றுத்திறனா ளிகள் கலந்து கொண்டனர். துவக்க விழா நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் சீனிவா சன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலர் முனைவர் மா.ராஜா, மயிலாடுதுறை வட்டாட்சியர் அ.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.