திருவாரூர், மார்ச் 7- திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் வீதிவிடங்கன் டாஸ்மாக் ஊழியரை முக மூடி அணிந்த கொள்ளையா்கள் தாக்கி ரூ. 8.45 லட்சத்தை திங்கள்கிழமை கொள்ளை யடித்துச் சென்றுள்ளனா் ஸ்ரீவாஞ்சியம் அருகே வீதிவிடங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை மேற்பார் வை யாளர் தட்சிணாமூா்த்தி (53). டாஸ்மாக் கடையில் வசூல் ஆகும் பணத்தைத் தினசரி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று நன்னிலத்தில் உள்ள வங்கியில் செலுத்து வார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடையில் வசூலான தொகை ரூ.8.45 லட்சத்தை எடுத்துக் கொண்டு திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் நன்னிலத்துக்கு சென்றாா். ஸ்ரீவாஞ்சியம் அருகே ஆற்றின் கரை யில் மறைந்திருந்த முகமூடி அணிந்த இரு வர், இருசக்கர வாகனத்தைத் தள்ளி விட்டு, தட்சிணாமூா்த்தியைத் தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.8.45 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். தட்சிணா மூர்த்தியை கிராமத்தினர் மீட்டு நன்னிலம் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் டாஸ்மாக் மேற் பார்வையாளர் தெட்சிணாமூர்த்தியைத் தாக்கி வழிப்பறி செய்த அடையாளம் தெரி யாத நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஊழி யர்கள் திங்களன்று இரவு ஏழு மணியள வில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அனைத்து டாஸ்மார்க் ஊழி யர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியரைச் சந்தித்து உடனடி யாக குற்றவாளியை கைது செய்ய வலி யுறுத்தி மனு அளித்தனர்.