மன்னார்குடி, ஜூலை 20 - நிலுவையில் உள்ள மருத்துவப்படி மருத்துவ பில்களை உடனே வழங்க வேண்டும். 1.1.2017 முதல் வழங்க வேண்டிய 15 சதவீத ஓய்வூதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு தர்ணா போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பக்கிரிசாமி தலைமை வகித்தார். கே.ஆர். பாஸ்கரன், வி.சண்முகம் முன்னிலை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செய லாளர் ஆர்.மகேந்திரன் தர்ணாவை துவக்கி வைத்து உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பிச்சைக்கண்ணு கோரிக்கை விளக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜி. ரகுபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் கே. அகோரம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மாநில அமைப்புச் செயலாளர் எம்.குரு சாமி சிறப்புரையாற்றி, தர்ணாவை முடித்து வைத்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.என். செல்வராஜ் நன்றி கூறினார்.