districts

‘நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு’ என கூறி 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களின் வீடுகளை அகற்றுவதா?

குடவாசல், நவ.19 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள அரசவனங்காடு ஊராட்சியில் அமைந்துள்ள திருவாரூர் -  கும்பகோணம் நெடுஞ்சாலையில் சாலைக்கு  இடையூறின்றி 40 வருடங்களாக குடியி ருக்கும் மக்களின் வீடுகளை அகற்றுவதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. உழைக்கும் வர்க்கத்தின் ஒப்பற்ற  தலைவர் மறைந்த தோழர் கோ.வீரய்ய னின் நான்காம் ஆண்டு நினைவு தினம்  கடைபிடிக்கப்பட்டது. அவரது நினைவிடத் தில் மலரஞ்சலி செலுத்திவிட்டு வரும்போது, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் வாகனம் முன்பு நின்று, பொதுமக்கள்  சிலர் குடும்பத்துடன், ‘40 ஆண்டுகளாக குடி யிருக்கும் எங்கள் வீடுகளை காப்பாற்றி தாருங் கள்’ என கண்ணீருடன் முறையிட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில், “கடந்த மாதத்திலிருந்து நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு என கூறி, எங்கள் வீட்டை காலி செய்வதிலே சிலர் குறியாக உள்ளனர்.  இதையடுத்து கடந்த நவ.12 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் 40 ஆண்டுகளாக குடி யிருக்கும் எங்கள் வீட்டிற்கு பட்டா வழங்கு மாறு மனு கொடுத்துள்ளோம். இந்நிலை யில், நெடுஞ்சாலை துறையிலிருந்து உடன டியாக நவம்பர் 21 ஆம் தேதி குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வந்துள்ளது. தற்போது என்ன செய்வது என தெரியவில்லை” என்றனர் வேதனையுடன். இவர்கள் குடியிருக்கும் பகுதி சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக அமைந்துள்ளது. 40 ஆண்டுகளாக வசிக்கும் இந்த குடியிருப்புகளை அகற்று வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக் கிறது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி யர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என  சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் உறுதியளித்து ஆறுதல் கூறினார்.  கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் டி. ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், திருவாரூர் நகரச் செயலா ளர் எம்.தர்மலிங்கம், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் சி.லோகநாதன் மற்றும் அரசவனங் காடு ஊராட்சி மன்ற தலைவர் சுலக்சனா லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.