திருவாரூர், ஜூன் 15- ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணாறு உப வடி நிலத்தைச் சேர்ந்த அரிச் சந்திரா நதி, அடப்பாறு, பாண்டவையாறு, வெள்ளை யாறு உள்ளிட்ட 6 ஆறுகளை யும் மேம்படுத்துவதற்காக ரூ.960.66 கோடி திட்ட மதிப் பீட்டில் முதல் கட்ட பணியாக திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு உப வடிநில ஆறுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை செயல் படுத்த ஆறு, கால்வாய் மற்றும் வடிகால் கரைகளில் உள்ள அனைத்து வித ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட வேண்டி, உரிய கணக்கீடுகள் மேற்கொள்ளப் பட்டு திருவாரூர் மாவட்டத் தில் மொத்தம் 1237 குடும்பங் கள் இத்திட்டத்தினால் பாதிக்கப்படும் என கண்டறி யப்பட்டது. அதில், 486 பேருக்கு ரூ.7 கோடியே 65 லட்சத்து 935 இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. எஞ்சிய 751 நபர்க ளின் வாழ்வாதாரம் மற்றும் மீள் குடியேற்ற செயல்பாட் டிற்காக குடியிருப்பு வீடுகள் ரூ.71 கோடியே 34 லட்சத்து 50 ஆயிரம் திட்ட மதிப் பீட்டில், திருவாரூர் மாவட்டத் தில் 27 இடங்களில் அரசு நிலங்கள் தேர்வு செய்யப் பட்டு வீடுகள் கட்டப்பட்டு வரு கின்றன. அதன் தொடர்ச்சியாக புதன்கிழமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நீர்வளத்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் குடி யிருப்பு வீடுகள் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா திட்டாணிமுட்டம்-I, திரு விடைவாசல், திட்டாணி முட்டம் -II புனவாசல்- I ஆகிய மீள்குடியேற்ற பகுதியில் வசிப்பதற்கு ஏதுவாக 65 பய னாளிகளுக்கு ரூ.7 கோடியே 92 லட்சம் மதிப்பிலான குடி யிருப்பு வீடுகள் மற்றும் 61 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பி லான இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் ஆகியவற்றை திருவாரூர் சட்டமன்ற உறுப் பினர் பூண்டி கே.கலைவா ணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.