districts

img

நுகர்பொருள் வாணிபக் கழகப் பணிகளை தனியார்மயமாக்க சுமைப்பணித் தொழிலாளர்கள் எதிர்ப்பு

திருவாரூர், மார்ச் 26-  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமைப்பணித் தொழிலாளர் சங்கம் சார்பில் திருவாரூரில் ஞாயிறன்று கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில்  டெல்டா மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  மாநாட்டிற்கு திருவாரூர் மாவட்ட சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரன் தலைமை வகித்தார்.  தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர்தா.முருகேசன்,  நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் டி.ஜெயராமன், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகி ஆர்.சங்கரய்யா,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி சிறப்புரையாற்றினார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, மாநிலத் தலைவர் வேங்கடபதி, மாநில சிறப்புத் தலைவர் எஸ்.குணசேகரன் மாநிலப் பொதுச்செயலாளர் அருள்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் நேரடிக் நெல் கொள்முதல் நிலையங்கள் சேமிப்பு கிடங்குகளில் பணி செய்யும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், நுகர் பொருள் வாணிபக் கழகப் பணிகளை தனி யார்மயமாக்க கூடாது, பொங்கல் கருணைத் தொகை ரூ.3,000 உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை நிறை வேற்ற தமிழக அரசை மாநாடு கேட்டுக் கொண்டது.