திருவாரூர், ஜூன் 13 - அரசின் சேவைகளை கடைக்கோடி மக்க ளுக்கும் எளிதாக-விரைவாக கிடைக்கச் செய்வதற்காக கொண்டு வரப்பட்டவைதான் இ-சேவை மையங்கள். கிராமப்புற மக்களும் அரசு எந்திரத்தோடு நேரடி தொடர்பில் இருக்கும் விதமாக குக்கிராமங்களில் கூட இ-சேவை மையங்கள் செயல்பட்டு வரு கின்றன. பல்வேறு வகையான சான்றிதழ்களை பெறுவதற்கு மக்கள் இ-சேவை மையங்களைத் தான் நாட வேண்டியுள்ளது. “இனிய சேவை-இணைய சேவை” என துவங்கப்பட்ட இந்த இ-சேவை மையங்கள் இன்று “இல்லாத சேவை-இயங்காத சேவை” என பொது மக்கள் குறிப்பிடும் வகையில் மாறியுள்ளது. பெரும்பாலான மையங்களில் தற்காலிக பணியாளர்கள் மிகவும் சொற்பமான ஊதி யத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஊழியர் களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் இருப்பது மற்றும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத் தினால், அரசு அலுவலகங்களில் செயல் படும் இ-சேவை மையங்கள் சரிவர இயங்கு வதில்லை. இதனால் தனியார் மையங்களை அணுக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில், மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சலாவுதீன் கூறுகையில், “பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில் மாண வர்கள் பல்வேறு சான்றிதழ்களுக்காக இ- சேவை மையங்களை நோக்கி செல்கின்ற னர். ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பாலான மையங்கள் செயல்படாமல் இருக் கின்றன. இதனால் தனியார் மையங்களை நாட வேண்டியுள்ளது. இது மாணவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல், கூட்ட நெரிசல் மற்றும் தேவை யற்ற செலவுகளையும் அதிகரிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலை யிட்டு அரசு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களில் உரிய ஆய்வுகளை நடத்தி அந்த மையங்கள் மீண்டும் இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.