திருவாரூர், ஜன.7 - ஆட்குறைப்பு செய்து பணிச் சுமையை அதிகரிக்கும் நகராட்சி நிர்வாகத்தினை கண்டித்தும், தனியார் மூலம் ஆள் எடுக்கும் நடைமுறையை திரும்ப பெறவும் வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நகராட்சி துப்புரவு ஊழியர் சங்க தலை வர் ஆர்.ராஜேந்திரன் தலைமையேற்றார். சிஐடியு மாநில செயலாளர் ஆர்.மோகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட செயலாளர் டி.முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் டி.கலியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆறுமுகம் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். அனைத்து முன்கள பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி குறைந்தபட்ச மாத ஊதி யம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். மழைக் கால உபகரணங்கள் வழங்க வேண்டும். எல்ஐசி மற்றும் அஞ்சலக காப்பீட்டு தொகை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.