குடவாசல், டிச.14- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் திருவாரூர் மாவட்டம் சார்பில் புதிய உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்று வரு கிறது. இதன் ஒரு பகுதியாக குடவாசல் ஒன்றிய பகுதியில் வாலிபர் சங்க புதிய உறுப்பினர் பதிவு குடவாசல் ஒன்றிய செயலாளர் கா.பகத்சிங் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ.கே.வேலவன், மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சலாவுதீன், மாவட்டப் பொருளாளர் எம்.டி. கேசவராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய, நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிதாக ஒரே நாளில் 1675 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட னர்.