திருவாரூர், ஜூன் 10 - கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 13 அன்று திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளி வாக னங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப் படுகிறதா என்பதனை திரு வாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருவாரூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரு வாரூர், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 215 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இச்சோத னையில் பள்ளி வாகனங்க ளில் அவசர கால வெளியே றும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறி விப்பு, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளதா, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி வைக்கப் பட்டுள்ளதா, ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா உள்ளிட்டவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் சிசிடிவி கேமரா, ஜிபிஆர்எஸ், இருக்கைகள் உள்ளிட்டவைகளில் குறை பாடுகள் இருந்ததால் 14 வாக னங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 50 வாகனங் களில் சிறு குறைபாடுகள் இருந்ததால் அவைகள் சரி செய்த பிறகு உரிமம் புதுப் பித்துக் கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக பள்ளி நிர்வாக கவனத்திற்கு வாகன ஓட்டுநர்கள் எழுத்துப்பூர்வ மாக தெரியப்படுத்த வேண்டும். பள்ளி வாகனங் கள் வேகக் கட்டுப்பாட்டை மீறி இயங்குகிறதா என்பதை கண்காணிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறது. மேலும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாது காப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சியும் வழங்கப்பட்டது.