districts

உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து

புதுக்கோட்டை, டிச.13- உர விற்பனை அனுமதி பெறாத இடங்க ளில் இருப்பு வைத்திருந்தாலோ, அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதா வது: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள 2,15,831 ஏக்கர்  சம்பா நெற்பயிருக்கு விவசாயிகள் மேலுரம் இட்டு வருகின்றனர். இந்த பயிர் சாகுபடி களுக்கு தேவையான யூரியா 3795 மெட்ரிக் டன்கள், டிஏபி 683 மெட்ரிக் டன்கள், பொட்  டாஷ் 1180 மெட்ரிக் டன்கள், காம்ளக்ஸ் 4871 மெட்ரிக் டன்கள், சூப்பர் 533 மெட்ரிக் டன்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது.   விவசாயிகள் மண்வள அட்டையின் பரிந்துரைப்படி இட்டால் உரச்செலவை குறைப்பதோடு, மண் வளமும் மேம்படும். நெல் சாகுபடியில் யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகிய வற்றை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இட வேண்டும். இப்கோ நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் நானோ யூரியாவினை விவ சாயிகள் யூரியா உரத்திற்கு பதிலாக பயன்  படுத்தலாம்.   உர விற்பனையாளர்கள் உர உரி மத்திற்கு அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும், அனுமதி பெறாத நிறு வனங்களிடமிருந்து கொள்முதல் செய்வ தும், விற்பனை செய்வதும் கூடாது. அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து கொள் முதல் மற்றும் விற்பனை செய்வது கண்டறி யப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப் படும்.  விவசாயிகள் உர விற்பனை நிலை யத்திற்கு செல்லும்போது, ஆதார் அட்டை யுடன், மண்வள அட்டை பரிந்துரையின்படி,  உரம் வாங்கி பயன்படுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சில்லரை உர விற்ப னையாளர்கள், விவசாயிகளுக்கு உர மூட்டையில் காணப்படும் அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும்.   விவசாயிகளின் பெயரில் தேவைக்கு அதிகமாகவோ அல்லது சாகுபடி இல்லாத நபர்களின் பெயரிலோ உரம் விற்பனை மேற்கொள்ளப்பட்டால் சில்லரை உர உரி மம் ரத்து செய்யப்படும். திடீர் ஆய்வின் போது தேவையற்ற இடுபொருட்களை விவசாயிகளுக்கு இணைத்து வழங்குவது கண்டறியப்பட்டால் அல்லது புகார் ஏதும்  பெறப்பட்டாலும் உர கட்டுப்பாடு ஆணை  1985ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.