districts

img

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் செல் டவர் அமைக்கும் பணியை நிறுத்துக!

குடவாசல், ஜூன் 30-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் அரசூர் வருவாய் சார்ந்த ஓகை கைலாசநாத கோவில் தெரு பகுதியில் நடை பெற்ற செல் டவர் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் செந்தில் தலைமையில் குடவாசல் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட  ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்துள்ள னர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  குடவாசல் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ஓகை கைலாசநாதர் தெருவில்  கடந்த  இரண்டு மாதம் முன்பு தனியார் செல் நிறுவனம் சார்பாக செல் டவர் அமைக்கும் பணி நடைபெற்றது.இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து செல் டவர் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 10 நாள்களாக மீண்டும் செல் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டபோது, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற கடிதத்தின் நகலை செல் டவர் அமைக்கும் பணி மேற்பார்வையாளர் கொடுத்துள்ளார்.  அந்த கடிதத்தில் செல் டவர் அமைக்கும் பணி சம்பந்தமாக ஜூன் 24 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து அறியும் கூட்டத்தில் எந்தவித ஆட்ச பணையும் தெரிவிக்காததால், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் படி செல்டவர் அமைக்கும் பணிக்கு உத்தரவு வழங்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜூன் 24 அன்று நடைபெற்ற கருத்துக் கூட்டத்தைப் பற்றி இந்தப் பகுதி மக்கள் யாருக்கும் எந்தவித தகவலும் தெரியாது. எனவே நாங்கள் நடைபெற்ற தாக கூறும் கருத்து கேற்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.  எனவே, ஏற்கனவே 50 மீட்டர் சுற்றளவு  ஒரு செல் டவர் இருப்பதை கவனத்தில் கொண்டு மீண்டும் இந்தப் பகுதியில் ஒரு செல் டவர் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் அதிகப்படியான கதிர்வீச்சினால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி மக்களின் அச்சத்தை நீக்க உடனடியாக செல் டவர் அமைக்கும் பணி நிறுத்தியும், வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.