திருவாரூர், மார்ச் 17- திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரி ஒன்றியம் வெண்ணவாசல் பகுதி யில் குடியிருப்புப் பகுதிகளை நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி நீர் நிலைக்கு எவ்விதமான இடையூறு மின்றி வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்காமல் வருவாய்த் துறையும், பொதுப் பணித் துறையும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சித்தது. தகவலறிந்து சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், கொர டாச்சேரி ஒன்றியச் செயலாளர் ஜி. ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன், விவசாயிகள் சங்க ஒன்றி யக் குழு உறுப்பினர் பரமசிவம், விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி ஆகியோர் பொதுமக்கள்-குடியிருப்புவாசிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.வி.நாகராஜன், “ திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுப்பணித் துறையினரும், வரு வாய்த் துறையினரும் நீதிமன்ற உத்த ரவைக் காரணம் காட்டி பல தலைமுறை களாக வசித்து வரும் குடும்பங்களை அப்புறப்படுத்தும் நிலை தொடர்கிறது. நீர்நிலைப் புறம்போக்குகளில் வசிப்பவர்களுக்கு அவர்களின் உடமை களை வேறு இடங்களுக்கு மாற்ற உரிய கால அவகாசம் வழங்கவேண்டும். வீடு களை இழந்து மாற்று இடங்களுக்குச் செல்வோருக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டுமென்றார்.