districts

குருவிமலை அரசு பள்ளியில் அறிவியல் சோதனைகள்

திருவண்ணாமலை,ஜன.9- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் சார்பில் ஸ்பெம் அம்பாசிடர் வனிதா எளிய அறிவியல் சோதனைகள் நடத்தினார்.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வே. ஆஞ்சலா தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம் மற்றும் அறிவியல் குறித்த தெளிவான விளக்கங்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் அறிவியல் பார்வையோடு எதையும் அணுக வேண்டும் என்ற நோக்கில் குருவிமலை அரசுபள்ளியில்  வானவில் மன்றம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக திங்களன்று (ஜன.9) மாணவர்களுக்கு அறிவியல் பரிசோதனைகள் செய்யப்பட்டது.  6, 7 ,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீர் சுழல், ஸ்பிரே, திட திரவ வாயு இவற்றின்  பண்புகள், தெர்மாகோல் பலூன் ஆகிய தலைப்புகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் திரேசா, பிரித்தி, பிரேமா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியை மலர்விழி நன்றி கூறினார்.