திருவண்ணாமலை, பிப்.11- திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி, நகர பொறுப்பாளர் ஹெச்.ஜலால், சிபிஎம் வேட்பாளர் ந.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.