திருவள்ளூர், மே 10- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஊத்துக்கோட்டை பகுதி மாநாடு திங்களன்று (மே-9) பெரியபாளையத்தில் நடைபெற்றது. சங்க கொடியை மூத்த சகோதரி நிர்மலா ஏற்றினார். பகுதி தலைவர் அ.பத்மா தலைமை வகித்தார், பகுதி செயலாளர் கே.ரமா வேலை அறிக்கை வைத்தார், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ரம்யா வாசித்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.மோகனா ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஊத்துக்கோட்டை தலைவராக புஷ்பலதா, செயலாளராக ரம்யா, பொருளாளராக ஜெயபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மீஞ்சூரில் 6 வது பகுதி மாநாடு வாயலூரில் நடைபெற்றது.மீஞ்சூர் பகுதி குழு உறுப்பினர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ச.ரம்யா துவக்கி வைத்தார். பகுதி செயலாளர் கவிதா அறிக்கையை முன் மொழிந்தார். மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ரமா, மாவட்ட பொருளாளர் ஏ.பத்மா ஆகியோர் பேசினர். மாதர் சங்க மீஞ்சூர் பகுதி தலைவராக புவனேஸ்வரி, செயலாளராக கவிதா, பொருளாளராக ரதியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர்.