திருவள்ளூர், நவ.29- அரசு கொடுத்த பட்டாக்களை உட்பிரிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தாமரைப்பாக்கம் அருகில் உள்ள அமணம்பாக்கம் வருவாய்த்துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (நவ.29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மாநகரில், கொமக்கம்பேடு இந்திரா நகர், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, வெங்கல், செப்பேடு ஆகிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு அரசு, வீட்டு மனை பட்டாக்கள் வழங்கியுள்ளது. 10 ஆண்டு களுக்கு முன்பு வழங்கிய பட்டாக்களை இன்னும் உட்பிரிவு செய்து கணினியில் பதி வேற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் பட்டா வைத்திருந்தும் அரசின் கணக்கில் வரவில்லை. இதனல் அரசு நலத்திட்டங்களுக்கு பட்டாக்களை பயன்படுத்த முடிய வில்லை. பட்டாக்களை கணினியில் பதி வேற்றம் செய்ய வேண்டும், பட்டா கிடைக்காதவர்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பின்னர், பட்டா வேண்டி 200 மனுக்களை வட்டாட்சியர் மதியழகனிடன் வழங்கினர்.மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாவை கணி னியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வாழும் மக்களுக்கு 15 நாட்களில் பட்டா வழங்கப்படும் எனவும், தோப்பு புறம்போக்கு உட்பட்ட மற்ற புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கு அடுத்த ஒரு மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு விச வட்டச் செய லாளர் எம்.பழனி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், விதொச மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், சங்கத்தின் நிர்வாகிகள் அருள், விஸ்வநாதன், மணிவண்ணன், தேவேந்திரன், கமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.