திருவாரூர், ஜூலை 23 - குறுவை சாகுபடி செய்யும் விவசாயி கள் பயன்பெறும் வகையில் குறுவை தொகுப்பு திட்டம் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.13.57 கோடி மதிப்பில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நூறு சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி மற்றும் 25 கிலோ பொட்டாஷ் என ரூ.2466.50 மதிப்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்டத் திலுள்ள விவசாயிகள் கிராம நிர்வாக அலுவ லரிடம் சிட்டா அடங்கல் பெற்று இணைய வழியில் விண்ணப்பித்து, அதன் நகலை வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் சிலருக்கு முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சொல் மற்றும் கைரேகை பதிந்து கொண்டு உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இன்னும் பல விவசாயிகள் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு குறுவைத் தொகுப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்கள் குறித்து புள்ளி விவரங்கள் இல்லாமல் அரசு இத்திட் டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு விவசாயி எத்தனை ஏக்கர் சாகுபடி செய்திருந் தாலும், ஒரு ஏக்கருக்கு மட்டுமே உரம் வழங்கப்படுகிறது.
அதுவும்கூட பல விவசா யிகளுக்கு கிடைக்காமல் இருப்பது விவசாயி களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உரிய தலையீடு செய்து விண்ணப்பித்துள்ள அனை வருக்கும் உரங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் வேளாண் மைக்கான நேர்முக உதவியாளரிடம் விசாரித்தபோது, இத்திட்டத்தின் கீழ் திரு வாரூர் மாவட்டத்தில் 47,500 ஏக்கருக்கு மட்டுமே உரங்கள் வழங்க திட்டமிடப் பட்டிருந்ததாகவும், தற்போது ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், மேலும் மீதமுள்ள விவசாயிகளுக்கு அரை ஏக்கருக்கான உரங்கள் என்ற அளவில் பிரித்து வழங்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்க செய்ய வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.