திருவள்ளூர், மார்ச் 3- மேல்முதலம்பேடு கிராம நிர்வாக அலுவ லகத்தை திறந்து, அதிகாரிகள் பணியாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிபூண்டி அருகிலுள்ள மேல்முதலம் பேடு ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் சாதா ரண விவசாயக் கூலிகளாக உள்ளனர். இவர்க ளுக்கு முதியோர் உதவித்தொகை, சிட்டா, சாதி சான்றிதழ் போன்ற பல்வேறு தேவைக ளுக்காக கிராம நிர்வாக அலுவலரை பார்த்து சான்றிதழ்கள் பெற வந்தால் அலுவலகம் எப்போதும் பூட்டியே கிடப்பதாக கூறப்ப டுகிறது. இதனால் ஏழைகள், மூத்தகுடி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பயிர்களுக்கான நிவாரண உதவி தொகையை, தங்களுக்கு வேண்டியவர் களுக்கு மட்டும் வருவாய்த்துறை அதிகாரி கள் வழங்குகின்றனர். நிலமே இல்லாத வர்களுக்கு கூட பயிர்க்காப்பீடு தொகை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஊராட்சியில் இருப்பதே 500-ஏக்கர் தான். ஆனால் 700-ஏக்கருக்கு காப்பீடு செய்துள் ளதாக தெரிகிறது.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டக் குழு உறுப்பினர் எம்.சி.சீனு கூறுகை யில், மேல்முதலம்பேடு ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக திறப்பதேயில்லை.விஏஒ- கிராமத்திற்கு வருவதேயில்லை.இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு வழங்குவதில் ஏராளமான முறை மைகள் நடைபெற்றுள்ளது, இதனை விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.