districts

img

வருவாய் பங்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் கரும்பு விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர், மார்ச் 25 - கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 4 ஆயிரம்  வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமையன்று  (மார்ச் 25) திருத்தணியில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருவாய் பங்கீடு சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ரத்து செய்ய வேண்டும்,  மாநில அரசின் பரிந்துரை விலையை பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களை போல ரூ.700 வழங்க வேண்டும், கரும்பு வெட்டுக் கூலி, உரம், உற்பத்தி செலவு என பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில் கரும்புக்கான விலையை மட்டும் ஏற்றாமல் உள்ளது. தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லாததால்,  அதிருப்தியில் உள்ளனர். இந்த பட்ஜெட் கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதால் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பி.பாபு தலைமை தாங்கினார்.இதில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சி.பெருமாள், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜெயச்சந்திரன், ஆலை மட்ட செயலாளர் என்.ஸ்ரீநாத், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல்அகமது உள்ளிட்ட  பலர் பேசினர்.