திருவள்ளூர், மே 9- பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெம்பேடு, குருவும், அரியத்தூர், பேரிட்டவாக்கம், செவ்வாய் கிராம மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பூண்டி ஒன்றிய மாநாடு ஞாயிறன்று (மே 8) சித்தசேரியில் நடைபெற்றது.இதற்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.முருகன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார், விவசாயி கள் சங்கத்தின் பகுதி தலைவர் டில்லி, செயலாளர் கே.விஜய குமார், சிஐடியு பகுதி தலைவர் ஆர்.முரளி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு மாநாட்டை நிறைவு செய்து பேசினார். எஸ்.நாகராஜ் நன்றி கூறினார். சங்கத்தின் பூண்டி ஒன்றிய தலைவராக ராமையா, செயலா ளராக எம்.கே.முருகன், பொருளாளராக பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.