tamilnadu

img

குடிமனை பட்டா, மின் இணைப்பு அதிகாரியிடம் இருளர் மக்கள் மனு

திருவள்ளூர், ஜூன் 13  திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள ஜனகராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்தவல்லிபுரத்தில் வசிக்கும்  இருளர்கள் தங்களது  22 வீடுகளுக்கு குடிமனை பட்டா கேட்டு ஆர்.கே பேட்டை வட்டாட்சிய ரிடம் மனு அளித்தனர். வங்கனூர் ஊராட்சியில் உள்ள எஸ். டி.கண்டிகையில் 10 குடும்பங்கள், எஸ்.வி.ஜி புரத்தில் 15 வீடுகளுக்கு குடி மனை மற்றும் பட்டாக்கள், ஆர்.கே.பேட்டை ஊராட்சி யில் வி.புதூர் பகுதியில் 20 குடும்பங்களுக்கு குடி மனை பட்டா, வீரமங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாவூரில் இரு குடும்பங்க ளுக்கு பட்டா, வெடியங்காடு ஊராட்சியில் தாமரைகுளம் பகுதியில் இணைப்பு சாலை மற்றும் 20 நபர்களுக்கு பட்டா, ராமபுரம் ஊராட்சி கோபாலபுரம் கிராமத்தில் குடிசைகள் அடிக்கடி தீப் பற்றி எரிவதால் தொகுப்பு வீடுகள் கட்டிக்தரவேண்டும் இருளர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு வட்டாட்சியரிடம்  மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்று க்கொண்ட ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் பாண்டிய ராஜன் அந்தந்த ஊராட்சிக ளின் விஏஒ-கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தை கூட்டி கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதிய ளித்தார். இதில் மலைவாழ் மக்கள்  சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்ட நிர்வாகிகள் சி.பெருமாள், ஆர்.தமிழரசன், ஜி.சின்னதுரை, எஸ். குமரவேல், வஜ்ஜிரவேல், கமலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.