districts

img

குவிண்டால் நெல் ரூ.2160க்கு கொள்முதல்: அமைச்சர் நாசர் தகவல்

திருவள்ளூர், செப் 7- திருவள்ளூர் ஊராட்சி ஒன்றி யத்தில் புதனன்று (செப். 7) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல்  கொள்முதல் நிலையத்தை  பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார். விவசாயிகளிடமிருந்து கொண்டு வரப்பட்ட நெல்களைதூற்றும் இயந்தி ரம் மூலம் சுத்தம் செய்து, அரசின்  விதிகளுக்குட்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சி யர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை யில் அமைச்சர் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர், திரு வள்ளுர் மாவட்டத்தில் 2021-22 காரீப் கொள்முதல் பருவத்தில் அரசு  கட்டிடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 15,942 விவசாயி களிடமிருந்து 1,11,225 மெட்ரிக் டன் நெல் ரூ.228 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது என்றார். விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்த நெல்லை அரிசி யாக்கி 75,000 மெட்ரிக் டன் பொது  விநியோகத் திட்டத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நடப்பு சொர்ணவாரி கொள்முதல் 2022-23 பருவத்தில் 25,340 ஹெக்டேர்  பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ள நிலையில், ஒரு ஹெக்டருக்கு 6 மெட்ரிக் டன் சராசரி மகசூல் வீதம் 1,52,000 மெட்ரிக் டன் மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே திறக்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் சன்ன ரக  நெல்  ரூ.2160 க்கும், பொது ரக நெல் ரூ.2115-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.