திருவள்ளூர்,பிப்.19- ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் குர்ரம் சைதன்யா (22) பிளாஸ்டிக் மறுசுழற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லூரிலிருந்து இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஆந்திரா மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி தொடங்கி கர்நாடக மாநிலம் வழியாக 3600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஞாயிறன்று(பிப்.19) வந்தார். அவருக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.