திருவள்ளூர், ஜூலை 10- தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க 5-வது மாவட்ட மாநாடு ஞாயிறன்று (ஜூலை10) வலியுறுத்தியுள்ளது. மீஞ்சூரில் தோழர்கள்: பி.சண்முகம், நா.பாலசுப்பிரமணி நினைவரங்கத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாவட்ட தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கே.குமரவேலு வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்.ஜி.சூரிய பிரகாஷ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்தி ரன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம் வேலை அறிக்கையை முன்மொழிந்தார்.மாவட்ட பொருளாளர் ஜெ.ரமேஷ் வரவு செலவு கணக்கை வாசித்தார். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலா ளர் வி.குமார், மாவட்ட துணை நிர்வாகிகள் ஜி.வினாயகமூர்த்தி, இ.ஜெயவேல், எஸ்.நரேஷ்குமார்,என்.ரமேஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன் மாநாட்டை முடித்து வைத்து பேசினார்.மாவட்ட துணைச் செயலாளர்கே.தேவராஜ் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள்
மாவட்ட தலைவராக பி.கதிர்வேலு, மாவட்ட செயலாளராக ஏ.ஜி.சந்தானம், பொருளாளராக பழனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு ஊராட்சி ஒஎச்டி ஆப்ரேட்டர் கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்யப்பட்டது. அதன் மாவட்ட தலைவராக ஜி.சூரியபிரகாஷ், செயலாளராக ஜெ.ரமேஷ், பொருளாளராக கே.குமரவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய உயர்வுக்கான அரசாணை வெளியிட்டு 17 மாதங்கள் கடந்த நிலையில் உத்தரவை அமலாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சி பேரூராட்சிகளில் ஒப்பந்த முறையில் மகளிர் சுய உதவி குழு என்ற பெயரில் பணிபுரியும் தூய்மை பணியாளர்க ளுக்கு பிஎஃப், இஎஸ்ஐ திட்டத்தை உரு வாக்க வேண்டும், பிரதி மாதம் 5 ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.